சூட்கேஸ் மூலம் அமெரிக்கா செல்லலாம்!

Written by vinni   // January 9, 2014   //

sutcase_women_002கைபெட்டியில் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டார்.

 அமெரிக்காவின் அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்த போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது.

அதிலிருந்த கனமான சூட்கேஸ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்பெட்டியில் பல துணிகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு மேலும் தீவிர சோதனையில் இறங்கியபோது பெண் ஒருவரின் உடல் இரண்டாக மடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பொலிசாரை கண்ட அப்பெண் எழுந்து உட்கார்ந்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும், அந்த காரின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.