கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்தது

Written by vinni   // January 9, 2014   //

yawn_lungs_002சீனாவில் பலமாக கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்து பாதிப்படைந்த பரிதாமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீனாவை சேந்தவர் ஓயூ(வயது 26), இவர் சின தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்த போது பலத்த கொட்டாவி விட்டார்.

இதன் பின்னர் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.

எனினும் அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஓயூவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், இவரின் நுரையீரலின் காற்று பை கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனவே காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


Similar posts

Comments are closed.