பௌத்த பிக்குகளிடம் பிரதமர் மன்னிப்பு கோரவுள்ளார்

Written by vinni   // January 9, 2014   //

dm-jeyaratnaபிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த பிக்குகளிடம்; மன்னிப்பு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹா சங்கத்தினரை, காவியுடைத்தரித்த(சிவிரதாரி) என்ற திட்டியதாக பிதமர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தவில்லை என அவரது ஊடகச் செயலாளர் ஜயசுந்தர உடுகும்பர தெரிவித்துள்ளார்.

பிரதமர் பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு நேற்றைய தினம் போராட்டம் நடத்தியிருந்தது. இந்தப் போராட்டத்தின் போது பௌத்த பிக்கு ஒருவரும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்குள் பகிரங்கமாக பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் உறுதியளித்ததனைத் தொடாந்து, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த சிங்கள ராவய அமைப்பினர் அகன்று சென்றிருந்தனர்


Similar posts

Comments are closed.