ராதீகா சிற்சபேசன் இலங்கையை நெருக்கடிக்குள் ஆழ்த்த முயற்சிக்கின்றார் – இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

Written by vinni   // January 9, 2014   //

rathiகனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இலங்கையை நெருக்கடிக்குள் ஆழ்த்த முயற்சித்து வருவதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு எதிராக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

சிற்சபேசன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தார் எனவும் அதனால் அவரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியிருந்தாகவும் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறும் வகையில் செயற்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மிகவும் நாகரீகமான முறையில் அதிகாரிகள் நடந்து கொண்டதாகவும், சிற்சபேசனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.