அவுஸ்திரேலியாவிடம் தோற்றது வெட்க கேடானது! முன்னாள் வீரர் சாடல்

Written by vinni   // January 8, 2014   //

england_team_002அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து முற்றிலுமாக இழந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் வந்து குவிகின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் இழந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் மீது அந்நாட்டு முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாள ருமான ஜெப்ரி பாய்காட் கடுமையாக பாய்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் முட்டாள்கள் போல் இங்கிலாந்து வீரர்கள் ஆடுகிறார்கள்.

தற்போதைய அவுஸ்திரேலிய அணி தலை சிறந்தது இல்லை என்பதால் இங்கிலாந்து ‘ஓயிட்வாஷ்’ செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணி 2006–07 ல் ஆஷஸ் தொடரை முழுமையாக இழந்ததற்கும், தற்போது ‘ஓயிட்வாஷ்’ ஆனததற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அப்போதைய அவுஸ்திரேலிய அணியில் வார்னே, மெக்ராத், கில் கிறிஸ்ட் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தனர்.

அப்போது தோல்வி அடைந்ததில் அவமானம் இல்லை. ஆனால், தற்போதைய தோல்வி மிகவும் அவமானமானது என்று தெரிவித்துள்ளார்.

இதே இங்கிலாந்தில் முன்னாள் அணித்தலைவரான இயன் போத்தமும் இங்கிலாந்து அணியை கடுமையாக சாடியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது மிகவும் வெட்க கேடானது என்றும், இங்கிலாந்து அணிக்கு முதுகெலும்பு இல்லாதததை இந்த தோல்வி எடுத்துக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.