தனது புதிய டேப்லட் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டது சம்சுங் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // January 8, 2014   //

galaxy_note_pro12_001சம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy Note Pro 12.2 தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட் ஆனது 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் Qualcomm Snapdragon 800 Processor, 3GB RAM மற்றும் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 9,500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது


Similar posts

Comments are closed.