ஈராக்கிற்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

Written by vinni   // January 8, 2014   //

modern_weapons_001ஈராக்கிற்கு இராணுவ உபகரணங்களை துரிதமாக வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈராக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக அரச துருப்பினருக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா யுத்த உபகரணங்களை வழங்கவுள்ளது.

இன்னும் சில தினங்களில் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நவீன ரக ஆயுதங்கள் ஈராக்கிற்கு வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஃபளுஜா நகர் ஏற்கனவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அன்பர் பகுதியில் தாக்குதல்கள் தீவிரடைந்துவருகின்றன.

அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குழுவே ஈராக் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றது.


Similar posts

Comments are closed.