கோத்தபாய எங்களை ஏமாற்றி விட்டார்!

Written by vinni   // January 8, 2014   //

gota-colombo-telegraphபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தம்மை ஏமாற்றி விட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹலால் சான்றிதழ் செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான பசில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

ஹலால் விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எங்கள் அமைப்பை ஏமாற்றி விட்டார்.

உலமாக்கள் மேற்கொண்டு வரும் பொய்க்கு ஏமாறாமல் நேரடியான முடிவை ஜனாதிபதியினால் எடுக்க முடியும். ஹலால் மற்றும் ஜம்மியத்துல் உலமா ஆகிய இரண்டு அமைப்புகளும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்றார்.


Similar posts

Comments are closed.