பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்

Written by vinni   // January 8, 2014   //

naomi_acid_002லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால், பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனி(வயது 21) என்ற பெண், தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனி(வயது 21) என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.

இதற்கு காரணம் நயோமி, தன்னை விட அழகாக இருந்ததே.

இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில், நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார்.

இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி, ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின், தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.