பாகிஸ்தானில் 6 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை : புனித தலம் மூடப்பட்டது !

Written by vinni   // January 8, 2014   //

Murder_titleபாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அயூப் ஷா புகாரி என்ற புனித தலம் உள்ளது. இதன் அருகே 6 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் புனித தலத்தின் ஊழியர்கள். மற்ற 3 பேர் அங்கு வந்த பொதுமக்கள் ஆவர்.

கொலை செய்யப்பட்டவர்களின் பிணங்களுக்கு அருகே ரத்தம் தோய்ந்த கத்தி கிடந்தது. மேலும் ஒரு குறிப்பு எழுதப்பட்ட பேப்பரும் கிடந்தது. அதில் இந்த புனித தலத்துக்கு யாரும் வரக் கூடாது. மீறி வந்தால் அவர்களுக்கும் இதே கதிதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இக்கொலைகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இக்கொலையை தொடர்ந்து அந்த புனித தலம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தவிர பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடந்த தீவிர வாதிகள் தாக்குதல்களில் 9 பேர் பலியாகி உள்ளனர்.


Similar posts

Comments are closed.