இந்தியாவில் இருக்கும் இலங்கை நாணயங்களைக் கொண்டுவர இலங்கை முயற்சி

Written by vinni   // January 8, 2014   //

Col- SL BD (2)இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது.

அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது.

இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது புத்தகயாவிலுள்ள ஆலய நிர்வாகத்தினருடன் மத்திய வங்கி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

இந்த நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியளிப்பதைத் தவிர புத்தகயாவிலுள்ள ஆலயத்தினரால் ஏதும் செய்ய முடியாது என்று தமாரா விஜேசூரிய கூறுகிறார்.

இந்நிலையில் இந்தியத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையர்களை, இந்திய நாணயங்களையே காணிக்கையாக செலுத்த பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


Similar posts

Comments are closed.