சிட்னி டென்னிஸ்: முதல் சுற்றில் சானியா ஜோடி அதிர்ச்சி தோல்வி

Written by vinni   // January 7, 2014   //

e54a0efe-7915-4b68-a269-fa6c0db2fb30_S_secvpfஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, ஜர்மிலா (ஆஸ்திரேலியா)-அஜ்லாத் (குரோஷியா) ஜோடியை எதிர்கொண்டது.

கடந்த ஆண்டில் கலக்கிய சானியா-காரா பிளாக் ஜோடி 3-6, 2-6 என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.


Similar posts

Comments are closed.