விமான சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பரிதாபம்

Written by vinni   // January 7, 2014   //

Tamil_Daily_News_47856867314சவுதியில் வானத்தில் இருந்து மனித சிதைந்த உடல் உறுப்புக்கள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செங்கடல் நகரின் செய்தி தொடர்பாளர் நவாப் பின் நாசர் அல்-போக் கூறியதாவது: சில நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இது போன்று நடக்கும்.

ஓடும் விமானத்தில் கள்ளத்தனமான பயணம் செய்ய முயற்சி செய்வார்கள்.  சக்கரங்கள் விமானத்திற்குள் அடங்கும் முன், ஓடி வந்து அந்த சந்துக்குள் உட்கார்ந்து கொண்டு ஓசிபயணம் செய்வது தான் இவர்களின் திட்டம். அப்போது கதவுகள் இவர்களை நசுக்கும். அப்படி நசுக்கும் போது  உயிரிழக்கும் அவர்களது உடல் உறுப்புக்கள் வானத்தில் இப்படி சிதறுவது உண்டு. கடந்த 2010ம் ஆண்டு பெய்ரூட் விமான நிலையத்தில் சவுதி ஜெட் விமான சக்கரம் வழியாக நுழைய முயன்ற ஒருவர் உயிர் இழந்தார் என்றார்.


Similar posts

Comments are closed.