விமானத்தில் மோத வந்த பறக்கும் தட்டு மாயம்

Written by vinni   // January 7, 2014   //

Tamil_Daily_News_60399591923இங்கிலாந்தில் விமானத்திற்கு அருகே விநோதமான பறக்கும் தட்டை பார்த்ததாக விமானி ஒருவர் கூறியிருக்கிறார். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கில் உள்ள பெர்க்ஷைர் பகுதிக்கு மேலே, 34,000 அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ் பயணிகள் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தின் இடதுபுறத்தில் திடீரென புட்பால் வடிவத்தில் ஒரு மர்மபொருள் பறந்தது. விமானத்தை மோதுவதுபோல் வேகமாக வந்த அந்த பறக்கும் தட்டை பார்த்த விமானி திகைத்துப் போனார். பறக்கும் தட்டு விமானத்தில் மோதுவதை தடுக்கமுடியாது என்று விமானி கருதும் அளவுக்கு அருகில் வேகமாக பறந்து வந்தது. ஆனால் கணநேரத்தில் விமானத்துக்கு மேலே, சில அடி உயரத்தில், அந்த பறக்கும் தட்டு பறந்து மறைந்தது.

இதையடுத்து, விமானி உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு, மர்ம பறக்கும் தட்டு பார்த்தது பற்றி தகவல் அளித்தார். இந்த தகவலால் திகைப்படைந்த விமான கட்டுபாட்டு அறையில் இருந்தவர்கள் ரேடாரில் அப்பகுதியில் பறந்துகொண்டிருக்கும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்தனர். ராணுவ ரேடார் மூலமாகவும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த மர்ம பறக்கும் தட்டு வந்ததற்கான எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த பறக்கும் தட்டு, புட்பால் வடிவத்தில் சில்வர் நிறத்தில் உலோகத்தால் செய்யப்பட்டு இருந்தது என்றும், அந்த பறக்கும் தட்டு அருகில் வந்தபோது விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டது போல தோன்றியது என்றும் விமானி கூறினார்.


Similar posts

Comments are closed.