பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

Written by vinni   // January 7, 2014   //

assault_weapon_001பாகிஸ்தானுக்கு உயர் ரக துப்பாக்கிகளை வழங்க அமெரிக்க நிறுவனம் நிறுவனம் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள “டெசர்ட் டெக்னிக்கல் ஆர்ம்ஸ்’ என்னும் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம், “ஸ்னிப்பர்’ ரக துப்பாக்கிகளை வழங்கும்படி பாகிஸ்தான் கோரியிருந்தது. இதன் பெறுமதி 93 கோடி ரூபாய்களாகும்.

இந்த அதிநவீன துப்பாக்கிகளை வழங்குவது, அமெரிக்க பாதுகாப்புக்கு எதிரானது என்பதால், அந்த நிறுவனம் மறுத்துவிட்டது.

இதுகுறித்து, இந்நிறுவன உரிமையாளர் நிக் யங், குறிப்பிடுகையில்,

“அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல; மற்ற ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பின், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது,” என்றார்.


Similar posts

Comments are closed.