விக்கினேஸ்வரனின் கருத்து தமிழீழ கோரிக்கையை கைவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு : வசந்த பண்­டார

Written by vinni   // January 7, 2014   //

vikneswaranஒற்­றை­யாட்­சியை கைவிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யென்ற முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தா­னது தனித் தமி­ழீழக் கொள்­கையை இன்­னமும் இவர்கள் கைவி­ட­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தென தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார்.

வடக்கு ஆளு­நரை வெளி­யேற்றும் வரை மத்­திய அர­சுடன் வட­மா­காண சபை மித­வா­தப்­போக்­கினை கடை­பி­டிக்­கு­மென்று அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்
நாட்டின் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­பட வேண்­டு­மென்ற விவாதம் பல்­வேறு தரப்­பு­களால் மேலெழுப்பப்­பட்­டுள்­ளது. ஆனால், இதனை பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு உள்ள மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை வைத்து செய்­து­விட முடி­யாது.

மாறாக, மக்கள் கருத்துக்கணிப்பு வாக்­கெ­டுப்பு நடத்தப் பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதன்­போது நிச்­சயம் பெரும்­பான்மை இனத்­த­வரின் அபி­லா­ஷை­க­ளுக்­க­மை­யவே புதிய அர­சி­ய­ல­மைப்­பு­க­ளுக்கு ஆத­ரவு கிடைக்கும். அது ஒற்­றை­யாட்­சியை ஆத­ரிப்­ப­தா­கவே அமையும்.

ஒற்­றை­யாட்­சிக்குள், பிள­வு­ப­டாத நாட்­டுக்குள், அதி­காரப்பர­வ­லாக்­கலை ஏற்­றுக்­கொள்­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், இன்று கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் ஒற்­றை­யாட்சி கைவி­டப்­பட்ட அதி­காரப்பர­வ­லாக்­க­லு­ட­னான புதிய அர­சி­ய­ல­மைப்பே தேவை­யென்­கிறார்.

அப்­ப­டி­யானால் இதன் உள்­ளார்ந்தம்தான் என்ன? கூட்­ட­மைப்­பினர் இன்­னமும் தமி­ழீ­ழக் கொள்­கையை வைவி­ட­வில்­லை­யென்­பதே ஆகும்.

எதிர்­கா­லத்தில் எப்­ப­டி­யா­வது தனித் தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வதே இவர்­க­ளது ஒரே இலக்காக இருக்­கின்­ற­தென்­பதை முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரங்­களை பர­வ­லாக்க முடியும். அதன் கீழேயே நாடு பிரி­யாது பாது­காக்­கப்­படும். நாட்டின் ஒற்­று­மையை விரும்­பா­த­வர்­களே ஒற்­றை­யாட்­சியை எதிர்க்­கின்­றனர்.
இவ்­வா­றான நிலைப்­பா­டுகள் தலை­தூக்கும் போது எவ்­வாறு இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை, நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த முடியும்.

ஆளுநர்
தமி­ழீழ இலக்கை அடைய தடை­யாகி இருப்­பவர் வட­மா­காண ஆளுநர். எனவே, ஆளுநரை வெளியேற்றிக் கொள் வதற்காக ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மிதவாதப்போக்கை கடை ப்பிடிக்கின்றார். அதன் பின்னர் மத்திய அரசுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ இலக்கை நோக்கிப் பயணிப்பது நிச்சயமாகுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.