மழையில் நிற்க வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர்

Written by vinni   // January 7, 2014   //

banthula gunawarrdena_CIகடுமையான மழைபெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியரை வெளியே நிற்க வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்பாகமுவ மத்திய கல்லூரி மாணவ மாணவியரே இவ்வாறு பலவந்தமான முறையில் கடும் மழையில் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடற் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடாத்தப்பட்ட தேசிய நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றார். இந்த தேசிய நிகழ்வு இப்பாகமுவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரவு முழுவதிலும் கடும் மழை பெய்த போதிலும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை பாடசாலை மைதானத்திலேயே நடத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விருந்தினர்கள் மேடையில் அமர்ந்து கொண்ட போதிலும், மாணவ மாணவியர் வெட்ட வெளியில் மழையில் நனைந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் உரையை ஆரம்பித்த போது இலேசான மழை பெய்ததாகவும், உரையைத் தொடரும் போது கடுமையான மழை பெய்தாகவும் குறிப்பிடப்படுகிறது. கடுமையான மழையையும் கருத்திற் கொள்ளாது கல்வி அமைச்சர் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.