நான் கண் மூடுவதற்குள் சுதந்திர தமிழீழம் மலர்வதை பார்க்க வேண்டும்: வைகோ பேச்சு

Written by vinni   // January 7, 2014   //

vaikoம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது இலங்கைக்கு ராணுவ உதவியோ, பணத்திற்காக ஆயுதமோ விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்தார். அவர் பிரதமராக இருக்கும் வரை இந்த உறுதி மொழியை பாதுகாத்தார்.

ஆனால் 2004–ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமர் ஆனதும் சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் தான் காரணம்.

டெல்லியில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசியபோது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். இதற்கு காரணமானவர்களை மக்கள் தீர்ப்பாயம் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டேன்.

ஈழப்போர் முள்ளி வாய்க்காலோடு முடிவு பெற்று விட்டது என நினைக்க வேண்டாம். முள்ளி வாய்க்கால் மூலம் புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. தமிழீழம் அமைப்பதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர்வதை நான் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தட்டிக்கேட்க தயங்க கூடாது, ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் பாராளுமன்ற தேர்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எந்த களத்தில் இருந்தாலும் நாங்கள் முழு மன வலிமையோடு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Similar posts

Comments are closed.