2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் -கோத்தபாய ராஜபக்ச

Written by vinni   // January 7, 2014   //

Gotabhaya_Rajapaksa_200904262015ம் ஆண்டு முற்பகுதியில் பெரிய தேர்தல் நடைபெறும் என்ற எதிர்வை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

குடிசைப் பகுதியில் உள்ளவர்களுக்கான மாடிவீட்டு திட்டத்தின் இரண்டாம் பகுதியின் பணிகளை தெமட்டகொட பிரதேசத்தில் நேற்று பார்வையிட்டபோது அவர் இந்த எதிர்வை வெளியிட்டார்.

இந்த மாடிவீட்டு திட்டத்தை நீண்ட நாட்களுக்கு தொடரமுடியாது இந்த நவம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்று அவர் இதன்போது அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

2015 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

எனினும் 2014 ஆம் ஆண்டு நவம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சில அரசியல் அமைப்பு ரீதியான முட்டுக்கட்டைகள் உள்ளமையை அடுத்தே அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கக்கூடிய ஒருவரான கோத்தபாயவின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.