ஐசிசி பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா

Written by vinni   // January 6, 2014   //

icc-cricket1_0ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் 133 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா அணி உள்ளது.

117 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ஆஷஸ் தொடரில் 5 டெஸ்டிலும் தோற்றதால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பின்தங்கியது.

பாகிஸ்தான்(102 புள்ளிகள்) 5வது இடத்திலும், இலங்கை 6வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 7வது இடத்திலும், நியூசிலாந்து 8வது இடத்திலும், ஜிம்பாப்வே 9வது இடத்திலும், வங்கதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.


Similar posts

Comments are closed.