ஆம் ஆத்மி கட்சி பற்றி ஏ.ஆர்.ரகுமானின் பரபரப்பான கருத்து

Written by vinni   // January 6, 2014   //

rahuman_002டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது குறித்து கருத்து வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இன்று 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அவர் சினிமா மற்றும் அரசியல் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களுக்கென நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வாழ்க்கையிலிருந்து நிறைய கற்கிறோம். மற்றவர்கள் மூலமாக பல அனுபவங்களை பெறுகிறோம்.

எனது 47வது வயதில் அதையெல்லாம் நினைத்து பார்க்கிறேன். அதிலிருந்து நான் கற்கும் விடயம், மற்றவர்கள் நம்மால் சந்தோஷம் அடைய வேண்டும் ன்பதுதான்.

குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என எல்லோரையுமே சந்தோஷப்படுத்த வேண்டும். அது மிக முக்கியம். உள்ளத்தில¤ருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும்.

மேலும், இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.