வன்முறைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி வெற்றி

Written by vinni   // January 6, 2014   //

bangaladesh_election_005வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், வங்கதேசத்தில் நேற்று திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடந்தது.

வன்முறையின் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராததால் மந்தமான நிலையிலேயே இருந்தது.

தேர்தல் நடைபெற்ற 59 மாவட்டங்களில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 147 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.

தேர்தலில் களமிறங்கியுள்ள 390 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜாதீயக் கட்சியை சேர்ந்தவர்கள்.

மீதமுள்ள 153 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படவுள்ளனர்.

தேர்தலை கண்டித்து எதிர்க்கட்சியினர் நடத்திய வன்முறை சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரர், தேர்தல் அதிகாரி உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

தேர்தலைத் தள்ளிவைத்து, அரசியல் கட்சிகள் இடம்பெறாத இடைக்கால அரசின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் ஷேக் ஹசீனா நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் கடந்த நவம்பர் முதல் ஏற்பட்ட வன்முறைக்கு 275-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.