ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக மாற நினைத்த 10 வயது பெண் மீட்பு

Written by vinni   // January 6, 2014   //

99bab260-9f74-4c9b-b090-70a1d06b2737_S_secvpfஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டாக செயல்படுதவற்காக மூளை சலவை செய்யப்பட்ட 10 வயது பெண் அந்த சதிச் செயலில் இருந்து மீட்கப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற அப்பெண்ணை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சித்திக் சித்திகி தெரிவித்துள்ளார். தலிபான் இயக்கத்தின் தளபதியான தனது அண்ணனின் உத்தரவுக்கு கீழ்படிந்தே அச்சிறுமி இச்செயலை செய்ய ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்ட அப்பெண்ணை பாதுகாப்பு படையினர் ஆசுவாசப்படுத்தி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து பேராபத்திலிருந்து அவளையும், பொதுமக்களையும் காப்பாற்றினர்.


Similar posts

Comments are closed.