பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி – 9 பேர் படுகாயம்

Written by vinni   // January 6, 2014   //

Pakistanபாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தின் அருகே கைபர் பழங்குடியின பகுதியான திராஹ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. அப்பகுதியில் ஏற்கனவே ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் தீவிரவாதிகளும் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீடு பழங்குடியினத்தவருடையதா அல்லது தீவிரவாதிகளுடையதா என்று ராணுவத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசுத்துறை உயரதிகாரி நஸிர் கான் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.