ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி 12-ம் தேதி பேரணி

Written by vinni   // January 6, 2014   //

e7095bc2-12ab-43a2-a1bf-648346712ecd_S_secvpfடெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.

முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனுமன் சிங் கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்ட தயாரிப்பு பணிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரு-காந்தி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சாதாரண மனிதனின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு, அமேதி பேரணி ஒரு தொடக்கமாக இருக்கும்.

வேலைவாய்ப்பின்மை, பிற உள்ளூர் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை ஆம் ஆத்மி கட்சி வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.