காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரையை கடந்தது

Written by vinni   // January 6, 2014   //

2251848-a-small-wooden-boat-anchored-in-the-bayகிழக்கு மாகாணத்தில் காலநிலை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதாக ​அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக வடக்கு கிழக்கில் கடும் காற்று, கடல் கொந்தளிப்புடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (06) அதிகாலை இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் கரையை கடந்துள்ளதால் நிலை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் மற்றும் இலங்கை திருகோணமலையில் தென் கிழக்கில் 250 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு இருந்தது.

இது தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடலோர பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தின் கிழக்கே 210 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கட்கிழமை (06) அதிகாலை இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று தமிழக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இலங்கையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால், வங்க கடலில் ஆழ்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். வடக்கு, கிழக்கு திசையில் வடக்கில் இருந்து வலுவான கடல் காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தமிழக வானிலை மையம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.