தமிழர்கள் படுகொலைக்கு காரணம் மன்மோகன்சிங்–சோனியா

Written by vinni   // January 6, 2014   //

soniya manmohanஇலங்கை தமிழர்கள் படுகொலைக்கு இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி ஆகியோரே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

திருச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றி வைகோ மேலும் கூறுகையில்,

வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது இலங்கைக்கு ராணுவ உதவியோ, பணத்திற்காக ஆயுதமோ விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்தார். அவர் பிரதமராக இருக்கும் வரை இந்த உறுதி மொழியை பாதுகாத்தார்.

ஆனால் 2004–ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமர் ஆனதும் சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் தான் காரணம்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசியபோது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். இதற்கு காரணமானவர்களை மக்கள் தீர்ப்பாயம் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டேன்.

ஈழப்போர் முள்ளி வாய்க்காலோடு முடிவு பெற்று விட்டது என நினைக்க வேண்டாம். முள்ளி வாய்க்கால் மூலம் புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது.

போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. தமிழீழம் அமைப்பதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர்வதை நான் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தட்டிக்கேட்க தயங்க கூடாது என்று வைகோ தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.