இலங்கை ஜோர்தான் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Written by vinni   // January 6, 2014   //

srilanka flgஇலங்கை ஜனாதிபதிக்கும், ஜோர்தான் மன்னருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துலலாவை சந்தித்துள்ளார்.

இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு வரி விலக்கு அளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த, ஜோர்தான் மன்னரிடம் கோரியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோர்தான் மன்னருக்கு, ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

1965ம் ஆண்டு முதல் ஜோர்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் ஜோர்;தான் விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் பல்வேறு வழிகளில் நன்மை ஏற்படக் கூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.