அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்!

Written by vinni   // January 6, 2014   //

downloadஅமெரிக்க போர்ககுற்ற நிபுணர் ஸ்டீபன் ரெப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்திலும் ரெப் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை நேரில் கையளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போர்க் குற்ற நிபுணர் ரெப்பை, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.

இந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டு;ள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஸ்டீவன் ரெப் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது


Similar posts

Comments are closed.