கார் விற்பனையில் முன்னிலையில் கனடா

Written by vinni   // January 5, 2014   //

budget-rent-a-car-canada2013ம் ஆண்டில் கனடா கார் விற்பனையில் முன்னிலையில் இருந்துள்ளது என்றும், தற்போதும் Ford நிறுவனம் முன்னிலையில் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reuters பத்திரிக்கையிலேயே இத்தகவல்கள் வெளிவந்துள்ளது.

பொருளாதார ரீதியாக கனடா மந்தநிலையில் இருந்தாலும், 2013ம் ஆண்டில் முன்பிருந்ததை விட அதிகளவான வாகனங்களை மக்கள் வாங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் கனடாவில் நிலவுகின்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவிற்கு விற்பனை நடந்திருக்கின்றது.

மொத்தமாக 1.74 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை நடந்திருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

General Motors Co, Toyota Motor Corp போன்ற நிறுவனங்கள் வாகன உற்பத்தியில் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

Ford நிறுவனமானது 2013ம் ஆண்டானது தமது நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் சிறந்த விற்பனையைத் தேடித் தந்த வருடம் எனவும், 1997ன் பின்பு 2013ம் ஆண்டில்தான் அதிகரித்த விற்பனை நடந்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றது.


Similar posts

Comments are closed.