முன்னாள் பெண் போராளிகளின் கதைகளை கூறும் நூல்

Written by vinni   // January 5, 2014   //

Ltteவிடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்படும் போது, எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து நூல் ஒன்று நேற்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கையின் எழுத்தாளர் மற்றும் சமூக நடவடிக்கையாளர் சர்மிளா செய்யத் இந்த நூலை எழுதியுள்ளார்.

உம்மத் என்ற பெயரைக்கொண்ட இந்த நூல் இலங்கையின் முஸ்லிம் பெண் ஒருவர், தாம் சந்தித்த சுமார் 250 முன்னாள் பெண் போராளிகளை மையமாக வைத்து நூலை எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்கள் போராளிகள் சமூகத்துடன் சேர்க்கப்பட்டாலும் கண்காணிக்கப்படுவதுடன் புறக்கணிக்கப்படுகின்றனர் என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பெண்களில் 75 வீதமானோர் உடல்ரீதியாக போரின் போது பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் என்று எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.