சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி!

Written by vinni   // January 5, 2014   //

AmericanCornerIC_348X261சமூக வளைத்தளங்களின் ஊடாக நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த மேற்கத்தைய நாடுகளால் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கத்தைய நாடுகள் சமூக வலைத்தளப் பயன்பாடு குறித்து நாட்டு மக்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது.

எகிப்து, டியுனிசியா போன்ற நாடுகளில் அரச விரோத செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட ஓர் மேற்குலக நாடுகளின் தூதரகம் யாழ்ப்பாணத்தில் காரியாலயம் அமைத்துள்ளது.

திருகோணமலையிலும் காரியாலயமொன்றை அமைக்க எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு இந்திய அரசாங்கமும் கவனம் செலுத்தியுள்ளது.

அரசியல் விமர்சனங்களைச் செய்ய மக்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் செயற்படுகின்றன.

இதேவேளை, சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்தி வருவதுடன், தற்போது பயிற்சி நெறியொன்றை நடாத்தவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.