வடக்கில் கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம்

Written by vinni   // January 5, 2014   //

Vietnam Asia Typhoonஇலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வானிலை மோசமடைந்துள்ளது. கிழக்கு கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதேநேரம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு கடலில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

200 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் இதன்போது அலை சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு மேலெழும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.