தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

Written by vinni   // January 5, 2014   //

vikneswaranநீண்ட காலமாகக் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிய வருகிறது.

இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி மகஸின் சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வார் என்று தெரியவருகிறது.

கடந்த 2 ம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவைச் சந்தித்துப் பேசியதன் பின்னணியில் வடக்கு முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

மகஸின் சிறைச்சாலைக்கு வரவுள்ள வடக்கு முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சந்தித்து பேச வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கைதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.