புத்தாண்டில் 5,000 பேருக்கு விசா வழங்கும் கனடா

Written by vinni   // January 4, 2014   //

canadaகனடிய அரசு முதன் முறையாக 5,000 புதிய குடியேற்ற விண்ணபங்களை ஏற்க முடிவு செய்துள்ளது.

கனடாவில் வசித்து வரும் நபர்கள், தங்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளை அழைத்து கொள்ளும் விதமாக இந்த புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 5000 புதிய குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்க முடிவு செய்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட உறவினர்களை வரவழைப்பவர்கள் சில கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் எனவும் தெரியவருகிறது.

கனடிய குடிவரவுத்துறை அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர், இவ்வாறான நடவடிக்கையானது மிகவும் துரிதமான செயற்பாடாக இருக்கும் எனவும், ஆனால் குறிப்பிட்ட நபர்கள் தங்க வேண்டிய காலத்தின் அளவு குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதய குடிவரவாளர்களுக்கான விதிமுறைகள்

1. புதிய குடிவரவாளர்களை வரவழைப்பவரது வருமானமானது ஆகக் குறைந்தது முன்பிருந்த தொகையிலும்பார்க்க 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட வருமானமானது 12 மாதங்களுக்குப் பதிலாகக் கடந்த 3 வருடங்களுக்கு அந்த நபர் பெற்றிருக்க வேண்டும்.

2. புதியநபர்களை வரவழைப்போர்அவர்களைப் பொறுப்பேற்கும் காலம் 10 வருடங்களில் இருந்து 20 வருடங்களாக அதிகரித்துள்ளது.


Similar posts

Comments are closed.