வளரும் நாடுகளுக்கு தொல்லை தரும் உடற் பருமன்

Written by vinni   // January 4, 2014   //

obesity_002பணக்கார நாடுகளை விட, வளரும் நாடுகளில் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த சமூக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சர்வதேச அளவில் 146 கோடி பேர் உடற் பருமனாகி குண்டு மனிதர்களாக இருக்கின்றனர்.

கடந்த 2008ம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 100 கோடியாக இருந்தது, இது 1980ம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம்.

இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம், இறைச்சி மற்றும் ஏனைய கொழுப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உட்கொள்வதே.

இதன்காரணமாக, சிலவகையான புற்றுநோய்கள், நீரிழிவு நோய்கள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் இந்த நாடுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இதற்காக மக்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்கொரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வளர்ந்த நாடுகளிலும் இப்பிரச்னைகள் காணப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.