இஸ்ரேலின் “கொல்லும் வண்டிகள்”

Written by vinni   // January 4, 2014   //

22-missile-launch-300இஸ்ரேலின் கொல்லும் வண்டிகள் என்றழைக்கப்படும் ஏவுகணைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஈரான், சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடமிருந்து தங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வரும் நிலையில் அந்நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் தற்காப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை தடுத்தழிக்கும் அம்பை இஸ்ரேல் சோதனை செய்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்தது. இதையடுத்து நேற்று இரண்டாவது முறையாக தனது மேம்படுத்தப்பட்ட அம்பை எய்து வெற்றிகரமாக இஸ்ரேல் சோதனை செய்துள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியின் மேல் பறந்து சென்ற இந்த அம்பு, வெற்றிகரமாக இலக்கை எட்டியதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சோதனை முயற்சியை நடத்தும்போது அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி யேர் ரமடி தெரிவித்துள்ளார்.

தாக்க வரும் ஏவுகணைகளை பூமியின் வளிமண்டலத்தின் மேலேயே தடுத்தி நிறுத்தி அழிக்கும் இந்த ஏவுகணைக்கு “கொல்லும் வண்டிகள்” என பெயரிடப்பட்டுள்ளது.

ரசாயன மற்றும் அணு ஆயுதங்களை கொண்ட ஏவுகணை தாக்க முனையும் போது தடுதழிக்கும் முயற்சியிலேயே இந்த சோதனையை இஸ்ரேல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மற்றும் சிரியாவிடம் இதுபோன்ற நீண்ட ஏவுகணைகள் உள்ளதாகவும், மேலும் ஹிஸ்புல்லா அமைப்பிடமும் இத்தகைய ஏவுகணைகள் உள்ளதாகவும் இஸ்ரேல் உறுதியாக நம்புகிறது.


Similar posts

Comments are closed.