அச்சுறுத்தும் பனிப்புயல்: ஒன்பது பேர் பலி

Written by vinni   // January 4, 2014   //

us_snowstorm_004வடகிழக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயலின் காரணமாக அங்குள்ள மக்கள் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர்.

இந்நிலையில் அங்கு 2 அடி உயரத்திற்கு பனி படர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விமான நிறுவனங்கள் நாடு முழுவதும் பயணிக்கும் 2300 விமானங்களை ரத்து செய்துள்ளன.

வர்த்தக மற்றும் பாடசாலை கட்டிடங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக மாசேச்சூசெட்ஸ் நகரம் அதிகளவில் பிரச்சினையை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பனிப்புயல் மேலும் உத்வேகம் கொண்டு அதன் தன்மை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை பனிப்புயலின் காரணமாக மிச்சிகன், கெண்டகி, இண்டியானா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.