மாகாணசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஜனாதிபதி

Written by vinni   // January 4, 2014   //

art.mahinda.rajapaksa.afp_.gi_மாகாணசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரசிறி தொடங்கொடவின் மகனுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

1993ம் ஆண்டு தென் மாகாணசபையை பலவந்தமாகவே நிறுவினோம். ஆளுனர் பாகீர் மாகார் கடிதத்தில் கையொப்பமிடவில்லை.

பலவந்தமாகவே தென் மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றினோம். அமரசிறி தொடங்கொட முதலமைச்சராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாகாணசபை நிறுவுதல் தொடர்பான பிரகடனத்தை நானே வாசித்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் காலிக்கு சென்றிருந்த போது முதலமைச்சர் சான் விஜயலாலிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.