ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

Written by vinni   // January 3, 2014   //

australia_england_5test_004இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி 326 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் வரலாற்று புகழ் மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின், கடைசி டெஸ்ட் தற்போது நடந்து வருகிறது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் குக் பந்துவீச முடிவு செய்தார்.

இதனைதொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது.

நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.