இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து லசித் மலிங்க நீக்கம்

Written by vinni   // January 3, 2014   //

malingaஇலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது அண்மைக்காலப் பெறுபேறுகள் சிறப்பாக அமையாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து புதிய வருடத்தில் அதிகளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக தொடரில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

இதன்படி முழுமையான திறமைகளை வெளிப்படுத்தாத சிரேஷ்ட வீரர்களைக் கொண்டு போட்டிகளை வெற்றி கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

லசித் மலிங்க, திஸர பெரேரா இருவரும் போதுமானளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில்லை எனவும், லசித் மலிங்கவின் உடற்தகுதி தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், அதன் காரணமாக உடற்தகுதிப் பயிற்சிகளிலும் லசித் மலிங்க பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை திஸர பெரேரா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களைத் தவிர, இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து, களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றுவான் கல்பகே ஆகியோரின் பதவிகளும் ஆபத்திலுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


Similar posts

Comments are closed.