யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் லத்வியாவும் இணைவு

Written by vinni   // January 3, 2014   //

lv-flagயூரோ வலயத்தில் புதிதாக இணைந்துகொண்டுள்ள லத்வியாவுக்கு யூரோ நாணயத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் பொதுவான நாணய அலகு ஒன்றை லத்வியா பயன்படுத்துவதால், அதன் பொருளாதாரத்தில் முக்கிய பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 18ஆவது நாடாக லத்வியா இணைந்துகொண்டது.

ரஷ்யாவின் உதவிகளில் பெரும்பாலும் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை லத்வியா இதன் மூலம் குறைத்துக்கொண்டுள்ளது.

இதேவேளை லத்வியாவில் 60 வீதமானவர்கள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ள பெரிதும் விரும்பவில்லை என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகின்றது.


Similar posts

Comments are closed.