நடுவானில் சிகரெட் பிடித்தவருக்கு நேர்ந்த கதி

Written by vinni   // January 3, 2014   //

passenger_tied_002விமானத்தில் தொடர்ந்து புகைப்பிடித்த காரணத்திற்காக ஜேர்மன் நாட்டு பயணி ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

விமானத்தின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பயணியை, அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த மதியாஸ் ஜார்க்(வயது 54) என தெரியவந்தது.

இவர், விமானத்தில் ஏறியது முதல் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்ததாகவும், புகைப்பதை நிறுத்த சொன்ன விமான ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மதியாஸை கட்டிப் போட்டுள்ளனர்.

இதனை விசாரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம் பாஸ்போர்டை பறிமுதல் செய்து ஜாமின் வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை 10ம் திகதி நடைபெற உள்ளது.


Similar posts

Comments are closed.