முதல் முறையாக மனம் திறந்துள்ளார் மன்மோகன் சிங்

Written by vinni   // January 3, 2014   //

manmohanஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பிரதமராகும் எண்ணம் இல்லை என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரான புதிதில் நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். என்றும் மக்களுக்கு சேவை செய்வதே என் எண்ணமாக இருந்திருக்கிறது.

எனது பதவியை நான் துஷ்பிரயோகம் செய்ததில்லை. நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை புதிய சீர்திருத்த நடவடிக்கைகளும், திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை, எனது வேலையை நான் மகிழ்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவின் பிரதமாராகும் அனைத்து தகுதியும் ராகுல் காந்திக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்

தொடர்ந்து பொருளாதாரம் குறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா உள்பட வளரும் நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வந்தது.

ஆனால்,சர்வதேச அளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் பொருளாதாரம் ஏற்றம் பெறும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதே வேளையில், பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.