அர்ஜென்டினாவில் கடும் வெப்பம்: ஏழு பேர் பலி

Written by vinni   // January 3, 2014   //

dead_body_வடக்கு அர்ஜென்டினாவில் அதிக வெப்ப காலநிலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அர்ஜென்டினாவில் 45 செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1906 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக அதிகளவில் பதிவாகியுள்ள வெப்பநிலை இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்ப காலநிலையில் இருந்து தப்புவதற்காக பொதுமக்கள் நீர்தேக்கங்கள் மற்றும் பூங்காக்களை நோக்கி படையெடுப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுதவிர, வடக்கு அர்ஜென்டினாவில் மின்சார தடையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.