கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் பாலியல் வல்லுறவு– அகதிப் பெண் குற்றச்சாட்டு

Written by vinni   // January 3, 2014   //

rapeகிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளரான பெண்ணொருவர் மீது மற்றொரு புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் வல்லுறவு புரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய பொலிசார் விசாரிக்கிறார்கள்.

கிறிஸ்மஸ் தீவில் தலா ஐந்து குடும்பங்களைத் தங்க வைக்கப்பதற்காக பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய முகாமொன்றில் பெண்மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தீவிற்குப் பொறுப்பான நிர்வாக உத்தியோகத்தர் கோர்டன் தொம்சன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் முறைப்பாடு செய்ய முன்வந்த சமயம். இந்தச் சம்பவம் பற்றி கடந்த வாரம் தெரியவந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

முகாமிலுள்ள எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து எவரும் வாய் திறப்பதில்லையென திரு.தொம்சன் தெரிவித்தார்.

இந்தத் தீவில் 2,200 இற்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இங்குள்ள மோசமான நிலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


Similar posts

Comments are closed.