நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி

Written by vinni   // January 3, 2014   //

unhcrநாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் வெளிநாடுகளில் புகலிடம் கோரி சென்றவர்களில் சொற்ப அளவிலானவர்களே இலங்கை திரும்பியுள்ளனர். அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 51 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2011ம் ஆண்டு முதல் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் சுய விருப்பின் அடிப்படையில் 1480 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர். எனினும், 2013ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 718ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

2013ம் ஆண்டு புள்ளி விபரத் தகவல்களி;ன் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 124,436 புகலிடக் கோரிக்கையாளர்கள் உலகம் முழுவதிலும் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களே அதிகளவில் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


Similar posts

Comments are closed.