வடக்கு தெற்கில் கிளர்ச்சி ஏற்படக் காரணம் இளைஞர் அதிருப்தியே !

Written by vinni   // January 3, 2014   //

mahinda rajapakshaஇளைஞர் அதிருப்தியே வடக்கு தெற்கில் கிளர்ச்சி ஏற்படக் காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்பு இன்மை உள்ளிட்ட காரணிகளினால் இளைஞர் யுவதிகள் மத்தியில் விரக்தி நிலை ஏற்பட்டது.

இதுவே வடக்கிலும் தெற்கிலும் ஆயுத வன்முறையாக வெடித்தது.

எல்லைக் கிராமம், க்ளைமோ குண்டு, போர் நிறுத்தம், பின்தங்கிய கிராமம், பதில் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் அகராதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தன.

எனினும், இந்த அரசாங்கம் கூடியளவு அரச சேவையை விஸ்தரித்துள்ளது.

பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் கடந்த காலங்களில் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க உத்தியோகம் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் கொழும்பு சுகத்தாச அரங்கில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.