ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இந்த மாதம் விசேட சந்திப்பு

Written by vinni   // January 3, 2014   //

Sampanthar-Mahinthar-150-newsஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இந்த மாதம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்துவார் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் இந்தியாவின் சென்னைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

சம்பந்தன் நாடு திரும்பியதன் பின்னர் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் கட்சி பேச்சுவார்த்தை நடத்தும். அண்மையில் சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் ஜனாதிபதி கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் சாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்புவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.