பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பௌத்த பிக்குவை பாதுகாக்க முயற்சி?

Written by vinni   // January 3, 2014   //

kaliyana-theerarபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரை பாதுகாக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும், குறித்த பௌத்த பிக்குவிற்கு அண்யைமில் பிணை வழங்கப்பட்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு எதனையும் வெளியிடாத காரணத்தினால் பௌத்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு பௌத்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கு மகளிர் அமைப்;புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரை பாதுகாப்பதற்கு பதிலாக பௌத்த பிக்குவை பாதுகாக்க முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மகளிர் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த எதிர்பை வெளியிட்டுள்ளன.
வவுனியா செத்செவன சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய கல்யாண திஸ்ஸ தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மருத்துவ சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், கடந்த 31ம் திகதி நிபந்தனையற்ற அடிப்படையில் குறித்த பிக்குவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணைகள் பெப்ரவரி மாதம் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்களம் பிணை வழங்குவதனை எதிர்க்கவில்லை என மகளிர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மகளிர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.


Similar posts

Comments are closed.